S. Kolathur, Kovilambakkam, Chennai
services@sreeagamashram.com
English English Tamil Tamil
  1. Home
  2. /
  3. Tamil Medicine

   இன்றைய நவீன மருத்துவம் அனைத்தும் 200 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய மருத்துவமே ஆகும், அவற்றில் ஹோமியோபதி ,யுனானி, அலோபதி போன்றவை தொடக்கத்திலிருந்ததே பல முனேற்றற்றங்களை அடைந்து வளர்ந்து கொண்டுள்ளது, அதே சமயத்தில் நாம் வருத்தப்பட வேண்டிய விடயம் என்னவென்றால் நமது பாரம்பரிய மருத்துவமான தமிழ் மருத்துவம் மிகவும் பின்தங்கியே நிலையிலேயே உள்ளது. அதாவது நவீன மருத்துவங்கள் அனைத்தும் பல மாற்றங்களை பெற்று முன்னேறியும், நமது பராம்பரிய தமிழ் மருத்துவம் அதற்கு நேர்மாறாக மறைக்கப்பட்டும் அல்லது சரியாக கையாளபடாமல் முன்னேற்றம் இல்லாமலும்  இருக்கிறது. இதற்கு முழு முதல் காரணமே நம்முடைய பொறுப்பற்ற தன்மை எனலாம், மேலும் நாம் இதை உன்னிப்பாக கவனித்து பார்ப்போமேயானால் குறிப்பாக நம் பாரத தேசத்திலே , முக்கியமாக நமது தமிழகத்தில் சிறு குறிப்பை கூட ஏளனம் செய்வதில் (மருத்துவம் , பாரம்பரியம்) நம்மை மிஞ்ச யாவரும் இல்லை எனலாம், இது மிக வருத்தத்திற்கு உட்பட்ட செய்தியாகும். இதுவே நம்முடைய அண்டை நாடான சீனா வை எடுத்து கொண்டால் , சீனர்கள் அவர்களுடைய பாரம்பரியத்தையும், மருத்துவத்தையும் பொக்கிஷமாக பாவித்து இன்றைய தலைமுறை கூட அவற்றை போற்றி காத்தும் , செயல்படுத்தி வருவதும், மேலும் அதை அடுத்த தலைமுறைக்கு கொண்ண்டு செல்வதும் போற்றுதலுக்கு உரியதாக உள்ளது. மேலும் அத்தகைய கலைகளை கற்றறிந்த வித்துவான்களையும், மாணாக்கர்களையும் அவ்வரசு போற்றி பாதுகாத்து அவர்களுக்கு உரிய அங்கீகாரத்தை அளித்து அக்கலைகளை மேன்மேலும் வளர்த்து கொண்டுள்ளது. மேலும் உலக அரங்கில் இந்தியர்களையும் , தமிழர்களையும் பற்றிய பார்வை பெருமை மிக்கதாகவே உள்ளது என்பதில் சிறிதும் ஐயமில்லை, இந்தியர்கள் பாரம்பரிய மருத்துவத்திலும், வானசாஸ்திர கலைகளிலும் மற்றும் அரிய தொன்மை மிக்க கலைகளை உலகிற்கு தந்தவர்கள் என்ற பெருமை மிக்க குறிப்புகள் உலக அரங்கில் எங்கும் வியாபித்து இருக்கிறது. அனால் அதற்கு எதிர்மறையாக உள்நாட்டிலேயே இக்கலைகளின் பெருமை அறியாமல் இதை உதாசீன படுத்துவது மிக்க வேதனை அளிக்க கூடியதாக உள்ளது, இக்கால கட்டத்திலே இக்கலையை முழுவதுமாக கற்றுணர்ந்தவர் ஒரு சில ஞாநிகளை  தவிர யாரும் இப்பாரத கண்டத்திலே இல்லை எனலாம்.

 யாம் அறிந்த கலைகளிலேயே மருத்துவ கலையே மிகவும் சிறநந்தது என்று  திருமூலர் கூறுகின்றார், பல்வேறு  கணித விகிதாச்சாரங்களை கொண்டு அவர் தொகுத்த புவனை கக்கிஷம் எனும் மருத்துவ நூலிலே  அனைத்து மருத்துவ நுட்பங்களையும் உலகிற்கு தந்துள்ளார் என்றால் அது மிகையாகாது. மருத்துவ கலையை இரு பிரிவாக திருமூலர் உணர்த்தியுள்ளார், அவையாவன ஒன்று அக மருத்துவம் , மற்றோன்று புற மருத்துவம். இதை நமது நவீன மருத்துவ முறையை கொண்டு விளக்கினால் புரிந்து கொள்வதற்கு சற்று எளிதாக இருக்கும்.

இன்றும் நோயாளியை மருத்துவத்திற்க்காக மனதளவில் தாயார் செய்வதற்கு மனநல ஆலோசனைகளை எடுக்க சொல்லி மருத்துவர்கள் தங்கள் நோயாளிகளுக்கு மனநல மருத்துவர்களை பரிந்துரை செய்கின்றனர். இதுவே அக மருத்துவம் என அழைக்கப்படுகிறது  , அகத்தில் நம்பிக்கை ஊட்டுவதால் புறம் சிறப்படைகிறது. அக்கால கட்டத்தில் அக மருத்துவமே முதன்மையானதாகும்.

பண்டைய மருத்துவம் என்பது ஐம்பெரும் கருத்தாக்கத்திலிருந்து தனியே வரையறுக்கப்பட்டுள்ளது, மணி , மந்திர , எந்திர , தந்திர மற்றும் அவ்ஷதம், இவ்வனைத்தும் ஒன்னுக்கொன்று தொடர்புடையவையாகும், இதில் அவ்ஷதம் என்பது பண்டைய மருத்துவ கலையாகும், அப்போதைய மருத்துவமானது அறுவை சிகிச்சைக்கு ஒப்பான நேரடி மருந்து உட்கொள்ளும் முறையாகும் , உதாரணமாக கஷாயம், ரோக எண்ணெய்கள் , மூலிகை சாறுகள் , மூலிகை பற்று , கட்டுகள் இதற்கு மேலாக தொடு சிகிச்சை , நோக்கு  சிகிச்சை ,  ஆன்மீக கூட்டத்தில் கலந்து கொள்வதால் கிடைக்கும் ஆனந்த நிலை சிகிச்சை, மற்றும் அற்புத பொருட்களை  கொண்டு நோய்களை குணப்படுத்தும் முறைகளை கொண்டது நம் பண்டைய மருத்துவம். அப்பெயர் பெற்ற அற்புத  பொருளான ஒன்றை பற்றி இங்கு காணப்போகிறோம்.

உலகத்தில் நன்மருந்து திம் மருந்து என்ற கூற்றிற்கு பொருள் கூறும் விதமாக அத் திம் மை பற்றி இங்கு காணப்போகிறோம்.

திம் என்பதனை  கவுதம புத்தர் தம்ம பதம் என்று எடுத்து  இயம்பியுள்ளார். இராமாயணத்தில் இராமபிரான் தன் இளைய சகோதரனான பரதனுக்கு அருளி சென்ற பா தம் என்பதும் ஒன்றே ஆகும் . மன்னாக இருந்து தவ யோகியாகிய கவுதம புத்தருக்கு அக்கால கட்டத்தில்  தம் என ஆயிற்று. மன்னற்கு முன்னரே இவ்வுலகத்தில் உதித்து , உலவி காற்றில் கலந்து நின்று  , பற்பல  அற்புதங்களை புரிந்த ரிஷிகள், யோகிகள் , ஞானிகள் மற்றும் சித்தர்கள் அனைவரும் இப்பொருளை திம் என்று குறிப்பால் உணர்த்துகின்றனர். அத்தகைய குருமார்கள் தங்களுடைய உண்மையான சீடர்களுக்கு அளித்த பொக்கிஷ பொருளே திம் என்பதாகவும், அத்தகைய அற்புத பொருளை கொண்டு அச்சீடர்கள் தங்களுடைய உடலின் அணுக்களை மாற்றி அமைத்து எத்தகைய பிணிகளிருந்தும் தங்களை காத்தும் , சரிசெய்தும் கொண்டனர். 

இன்றய நவீன மருத்துவத்தில் எப்படி நம்முடைய உடலில் உள்ள டி.என்.ஏ வில் உள்ள பிரச்சனைகளை, ஆர்.என்.ஏ வை ஆராய்ந்து மாற்றி கொண்டு சரி செய்து கொள்வதை போல, அக்கால கட்டத்தில் இருந்து  நாம் பயன்படுத்தி வரும்  நாபிக்கொடியில் கூட உடலிற்கு தேவையான மருத்துவம் இருப்பதாக தற்கால ஆராய்ச்சிகள் கூறுகின்றன. நம் உடல் அமைப்பு பிறக்கும் பொழுது எவ்வளவு ஆரோக்கியமாகவும் ,பிணி  மற்றும் குறைபாடின்றி இருந்ததோ அத்தைய உடல்நிலையை மீணடும் சீர் செய்து கொடுக்க வல்லது இத்தகை திம்  மருந்து. இக்கால கட்டத்தில் இவ்வரிய பொக்கிஷத்தை (திம் ) பற்றிய ஞானம் உலக மக்களிடையே இல்லாதது மிகவும் வருத்தற்குரியது. இந்த பொக்கிஷத்தை பூர்வபுன்னிய பலன் கொண்ட உலக மக்களுக்கு உரைப்பதே எம்பிறவி நோக்கமாகும்.

 ஆதி இறைவன் முருகன் நமக்கருளிய தமிழும் அதன் பொக்கிஷமும் பின் சித்தர்களால் முறை படுத்தபடுகிறது, தமிழை படைத்து அருளிய இறைவன் முருகர் தன் ஞானத்தால் பல அற்புதங்களை செய்து காட்ட, இக்கலியுகத்திற்கு இப்பொக்கிஷம் மருந்தாக அமைய, தமிழ் என்றும் அழிவில்லா மொழியாக விளங்க அவர் சில விடயங்கள் நமக்கு அருளுகிறார். இதில் அகத்திய மாமுனி உட்பட பதினென் சித்தர்களுக்கும் , பதினென் என்றால் பதின் எட்டு என்று பொருள் கொள்ளாமல் பதி யின் (இறைவன்) சிந்தையில் நிலைத்துஇருந்த கோடானகோடி சித்தர்களை  கணக்கில்கொள்ளவேண்டும்  , அதிலும் இப்பொக்கிஷத்தை கையாண்ட முப்பதிற்கும் மேலான சித்தர்களையே நாம் இன்று பெருவாரியாக அறிகிறோம்.     

சித்தர்களில் முதன்மையான சித்தராகவும் , முதன்மை  குருவாகவும் விளங்கும், சிவனுக்கும் பார்வதிக்கும் நேரடி தொடர்பில் இருந்து அவர்களுக்கு இடையே ஆன உரையாடலை செவிமடுக்கும் பெரும் பாக்கியத்தை பெற்றவர் நந்தீஸ்வரர் ஆவார். இறைவனின் அருளால் நந்தீஷ்வரர் அத்தகைய தெய்வ ரகசியத்தை செவி வழி உணர்ந்து  அறிந்தாலும், அந்த ரகசியம் காக்கப்பட வேண்டி வெளிக்கூற இயலாதபடி   ஓம் கார தத்துவத்தை சப்தமாக வெளியிடும்  ஆவின் இனத்தை இறைவன் படைக்கின்றார், மேலும் சமஸ்கிரதமோ , தமிழோ எதுவாக இருந்தாலும் ஆ என்பதே  அடிப்படை சப்தமாகும்.

முருகனின் அருளை இவ்வுலகம் பெற்று சிறப்புற ,முருகரே  சித்தர்களை படைத்து, இலக்கணங்களை வகுத்து அவர்களுக்கு நேரடியாக உபதேசம் தருகிறார், ரிஷிகளும் சித்தர்களும் அப்பேரின்ப அருளினால் புலங்காகிதம் அடைகின்றனர். நான்கு வேதங்களிலே எவ்விடத்திலும் பிழை இல்லாமல், கனக்கச்சிதமாக இருப்பது போன்ற ஒன்றை முருகர் இவ்விவுலகத்திற்கு அருளியுள்ளார், அப்பெரும்பொருளில் அவருக்கு இணை அவரே ஆவார், படைத்தலும் அவரே, காத்தலும் அவரே அதன் மூலம் தீயனவற்றை அழித்து நீதியை நிலை நாட்டுவதும் அவரே! . இப்பெருமையினாலே இவ்வுலகம் கார்த்திகேயனுக்கு உண்டான பக்தியை இன்றளவும் கொடுத்துவந்து  கொண்டிருக்கிறது.

இதற்கு அடிப்படையான விடயம் யாதெனில் ஞான பழத்திற்காக முருகனின் திருவிடையாடல் ஆகும், அதில் மூலாதரமான  கேள்வி யாதெனில் ஞானத்தில் சிறந்தவர் யார்? என்பதாகும். இதில் அடிப்படை கருத்தாக என்னை ஈன்ற, உலகத்தை படைத்த  அன்னையும் தந்தையுமே உலகம்  என்று  கூறி  அக்கணப்பொழுதில்தன்  புத்தியை  பயன்படுத்தி ஞான பழத்தை பெறுகிறார்  விநாயகர். ஆனால் தன்னிடம் உள்ள அபரிமிதமான சக்தியை கொண்டு இவ்வுலகத்தை  வலம் வந்து , உலகத்தின் தேவையை புரிந்து உணர்கிறார் வேலன்.  இவ்வாறு இருக்க முருகர் அருளிய அற்புத தமிழின்  எழுத்துக்கள் எங்கணம் சக்தியை உடையது என்பதனை உலகிற்கு எடுத்து இயம்ப அவர் அருளாலே தோன்றிய சித்தர் பெருமக்கக்களாகி அகத்தியர் உட்பட பதியை சிந்தையில் கொண்டிருக்கும் சித்தர்கள் அவரவர் உணர்ந்த ஞான நிலைக்கு ஏற்ப பல்லாயிரகணக்கான பாடல்களையும் நூட்களையும் வழங்கியுள்ளனர். 

உதாரணத்திற்கு முருகபெருமானின்  கட்டளைக்கு இணங்க அகத்தியர் இயற்றிய அகத்தியர் இரண்டாயிரம் முதலிய அனைத்து  நூல்களும்  மிகஎளிதாகவும்  கருத்துக்களை  புரிந்து கொள்ளும் வகையிழும் நம்மக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. அக்கருத்தையே  கொண்டு திருமூலர் மிக ரத்தினச்சுருக்கமாக பல நூட்களை கற்றுணர்ந்த சான்றோர்களுக்கு புரியும் வகையில்   நூட்களை அருளி உள்ளார்.  இவ்வனைத்திருக்கும் அடிப்படை உபதேசம் யாதெனின் ஐந்து எழுத்து மந்திரமான நமசிவாய மே. அதிலேயே அ காரமும் உ காரமும் அடங்கி உள்ளது, இவ்வைந்து  எழுத்திலே ஐம்பூதங்களும் அடக்கமாகும். இவ்வைந்து எழுத்தை கொண்டு ஐம்பத்தி ஒன்று அச்சரங்களை தொகுத்து உயிரையும், பூமியையும், அண்டம் மற்றும் பிண்டத்தையும் பிணைக்கும் ஆதாரசுதமாக உள்ளதாக இறைவன் குறிப்பிடுகிறார். இந்த ஐம்பத்தி ஒன்று அச்சரங்களே உலகத்தின் இயக்கமாக உள்ளது. அவெளுத்துக்களை போல் அண்டமும் , அவ்வண்டத்தை போல் பிண்டமும் இருக்கும்,  இந்த ஐம்பத்தி ஒன்று அச்சரங்களின் இயக்கத்தின் ரகசியமே நடராஜரின் தத்துவ திருவுருவமாகும், அவர் திருமேனி சூட்சுமத்தை பற்றி விரிவுரைக்க இப்பிறவியும்  இந்த யுகமும்  நமக்கு போதாது எனலாம் . ஆகையால் இதனை ஒரு குறிப்பால் உணர்த்துவோமேயானால் முருகர் அருளிய தமிழ் அவரது ஞானபார்வையால் பல சீடர்களை தோற்றுவிக்கிறார், ஞானிகளாகிய அவர்கள் தன்னை உணர்த்து உபதேசம் பெற்று சிறப்புமிக்க அவ்வெளுத்துக்களை  மணி , மந்திர , எந்திர , தந்திர மற்றும் அவ்ஷதம் முதலான இலக்கணங்களை கொண்டு சூட்சமத்தை வடிவமைத்தனர். 

இதில் அவ்ஷதம் என்பது ஐம்பத்தி ஒன்று அச்சரங்களை கொண்டு நடராஜர் தத்துவமான அண்டமே பிண்டம், பிண்டமே அண்டம் என்பதை  சக்கரவியூகமாக அமைத்து இச்சகரங்களுள்ளே  என்னென்ன எழுத்துக்களை வைக்கலாம், என்னென்ன சக்கரங்கள் என்னென்ன பூதங்களுடன் தொடர்புடையது, எந்தெந்த பூதங்களுக்கு உண்டான சக்கரங்கள்  எத்தகய  உடல்  பிணிகளை தீர்க்கவல்லது என்ற இந்த ஞானத்தை நேரடி குரு உபதேசத்தினாலேயே பெற முடியும், இவ்வனைத்தும் அற்புத படைப்பான  பரிபாடலிலேயே உள்ளது, ஆனால் இவற்றை எங்கனம்  எடுத்து மக்களுக்கு  புகட்ட வேண்டும் என்பது  அனைவருக்கும் புதிராக உள்ளது. அதனாலேயே திம் மருந்து என்ற பொக்கிஷத்தை அறிவியல் மூலம் தெரிந்து கொள்ள முற்பட்டு, முயற்சி மற்றும் ஆன்மீக நாட்டமின்மயால்  தோல்வியை தழுவி பலர் இத்தகைய அரிய விடயத்தை  எட்டாக்கனியாக்கி விட்டனர். இருந்தபோதிலும் நல்லார் பலர் இதனை அவரவர் பிறவிபலன்களாழும்  இறை சித்ததினாலும் இப்பொக்கிஷத்தை புரிந்து கொள்ள முயற்சி எடுத்து வருகின்றனர்.  

ஆனால் அடியேனுக்கு வழங்கப்பட்ட இந்த அற்புதமான வாய்ப்பை யாம் முழுமையாக உணர்ந்து இவுலகமக்களுக்கு எடுத்துரைக்க இத்தருணத்தில் இதன் மூலம் தயாராக உள்ளோம்.