ஓம் ஜெயஸ்ரீ மகா ஆத்மநாத அம்பலவாணாய நமஹ +91 94898 89848
நிகழ்வுகள் › ஆன்மீக வகுப்புகள்

ஆன்மீக வகுப்புகள்

📅 8 அக்டோபர் 2026 📍 Erode Ashram Spiritual Meditation by Guruji

Join our spiritual classes to learn the ancient teachings and practices of yoga, meditation, and self-realization.

ஸ்ரீ அகம் ஆஸ்ரமத்தில் சிறப்பு ஆன்மீக வகுப்புகள் நடைபெறுகின்றன. இவ்வகுப்புகள் அமாவாசை முதல் பௌர்ணமி வரை நடைபெறும். இணைய விரும்புபவர்கள் அமாவாசைக்கு முன்தினம் கலந்து கொள்ள வேண்டும். ஒரு தனி மனிதன் இந்த பூமியில் எப்படி முறையாக வாழ்ந்தால் அவனுடைய சவுகரியங்கள் நிரந்தரமாகும் என்பது பற்றிய பயிற்சிகள் வழங்கப்படும் — தூங்கி எழுவதில் இருந்து சரியான உணவு முறைகள் வரை, இருபத்திநான்கு மணி நேரத்தையும் எப்படி வகைப்படுத்தி வாழ்வது என்பது பற்றி.

எந்த துறையிலும், எந்த குடும்பச் சூழலிலும் உள்ள சிரமங்களை களைந்து வாழ மனம் ஒழுங்குபடுத்தப்படும். வகுப்புகளை நிறைவு செய்பவர்களுக்கு யோகம், கர்மம், பக்தி மற்றும் ஞானம் பற்றிய புரிதலும், அவரவருக்கான வழிபாட்டு முறைகளும் வழங்கப்படும். இந்த வகுப்புகளில் அனைத்து மதத்தினரும் கலந்து கொள்ளலாம்.

தரிசனம் பதிவு செய்யுங்கள் தொடர்பு

← நிகழ்வுகள்