ஓம் ஜெயஸ்ரீ மகா ஆத்மநாத அம்பலவாணாய நமஹ +91 94898 89848

எந்திர திருக்கோவில்

ஆகம விதி

நம் மன்னர்கள் ஆண்ட காலங்களே, பல போற்றுவதற்குரிய அரிய கலைகளை காத்து, வளர்த்து அதை மக்களுக்கு பயன்படுமாறு நடைமுறைப்படுத்திய காலம். அத்தகைய மன்னர்கள், எதிர்காலத்தில் மக்கள் தங்கள் அஞ்ஞானத்தால் இந்த அற்புத கலைகளை அழித்து விட்டால் என்ன செய்வது என்று எண்ணி, இந்த அனைத்து அறிவையும் உள்ளடக்கி யுகங்களாக கடந்து நிற்கும் கோயில்களை, மதிப்பிட முடியாத பொருட்செலவிலும் நேரத்திலும் ஆங்காங்கே அமைத்தனர்.

இதற்கான புனித நோக்கமே திருக்கோவிலுள் வந்து செல்வோரது அக நோய்கள் அனைத்தையும் தீர்ப்பதாகும். மருத்துவம் இரு பிரிவுகளாகும் — அக மருத்துவம், புற மருத்துவம். புற நோய்கள் மருத்துவனாலும், அக நோய்கள் திருக்கோவில்களாலும் தீர்க்கப்படும். அகம் சீராகும் பொழுது புறம் சீராகும். மக்களின் அக பிணியை தீர்க்க திருக்கோவில்கள் யாவும் ஒரு விதிக்குட்பட்டு எழும்ப வேண்டும் — அதுவே ஆகம விதி. எண்சாண் உடம்பில் கண் எங்கு இருக்க வேண்டுமோ அங்கு இருக்க வேண்டும்; அதுபோல திருக்கோவிலின் கருவறை எங்கு அமைய வேண்டுமோ அங்கு அமைய வேண்டும்.

இத்திருக்கோவில்களே மிகப் பெரிய திம் ஆகும். இன்றளவும் திருக்கோவில்கள் ஒரே நேரத்தில் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு அகத்தை சுத்தி செய்கின்றன. இச்சக்திமிக்க கோவில்களின் அபரிமிதமான அதிர்வலைகளை சில மணித்துளிகள் சென்று பெற இயலாது; குறைந்தபட்சம் ஏழு நாட்கள் சென்றால் தான் அதன் முழு பலனையும் உணர முடியும்.

அதிலும் குறிப்பாக கொடிமரம் கொண்டதே கோவில். கொடிமரம் இல்லாத எதுவும் கோவிலுக்கு சமானமன்று. கொடிமரம் என்பது நாபிக்கொடிக்கு சமானமானது — இந்த பிரபஞ்சத்திற்கும் பூமிக்கும் இடையே அதிர்வலையை ஈர்த்து தரும் மரம். ஐம்பது ஆண்டுகள் பழமையான கொடிமரம் கொண்ட கோவிலுக்கு சென்றால் ஒரு பலன்; இருநூறு முதல் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோவில்களுக்கு சென்றால் நிச்சயமான பலன்.

கோவில்களின் ஆகம விதியை எண்சாண் உடம்போடு ஒப்பிட்டால் — தொப்புள் கொடி என்பது கொடிமரம்; ராஜ கோபுரத்தின் இரு கதவுகளும் நமது கால்கள்; அர்த்த மண்டபம் முழங்கால் வரை உள்ள பகுதி; இடையில் உள்ள மண்டபங்கள் உடலின் நடுப்பகுதி; உள்ளே உள்ள மூலாதாரம்; தனியே உள்ள தலைப் பகுதியில், உயர்ந்த விமானத்திற்குக் கீழ், இறைவன் ஜோதி ரூபமாக காட்சியளிக்கிறார்.

ஆன்மீக வளர்ச்சியை நோக்கிய முதல் அடியை எடுங்கள்

ஓம் ஜெயஸ்ரீ மகா ஆத்மநாத அம்பலவாணாய நமஹ

தரிசனம் பதிவு செய்யுங்கள்