தியானம் என்பது நம் வாழ்க்கைக்கு மிகவும் தேவையான ஒன்று; அதை மேற்கொள்ளும் போதுதான் அனைவரும் நிதானமாக வாழ முடியும். உங்கள் வாழ்வில் எப்போதெல்லாம் தவறு செய்திருக்கிறீர்களோ, அப்போதெல்லாம் நிதானம் தவறியிருப்பீர்கள். சிறந்த முடிவுகளை பதட்டமில்லாமல் திடமாகவும் நிதானமாகவும் எடுக்க தியானம் மிகவும் அவசியம். தியானம் ஒரு மிகப்பெரிய பயிற்சி; அதை தினமும் செய்ய செய்யத்தான் அதன் பலன் முழுவதுமாக கிடைக்கும். மேலும், நம் உடலில் நேர்மறை ஆற்றல்களைத் தேக்கி வைத்துக் கொண்டே வரும். தொடர்ந்து 12 ஆண்டுகளுக்கு தினசரி தியானப் பயிற்சிகளை மேற்கொண்டு வந்தால், உங்கள் முடிவுகளை உணர்ச்சி வசப்படாமல் திடமாக எடுக்க முடியும்.
ஸ்ரீ அகம் ஆஸ்ரமத்தில் பயிற்றுவிக்கப்படும் தியான வகுப்புகளில் “தூர தேச பயணம்” என்னும் பெயரில் தியானப் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த வகுப்பில் பங்கேற்கும் அனைவரும் தங்கள் மனங்களை ஒருநிலைப்படுத்தி தியானங்களை மேற்கொள்வார்கள். வகுப்பின் முடிவில் ஒவ்வொருவரிடமும் தனித்தனியே, தியானத்தின் போது அவர்கள் மனம் கண்ட காட்சிகளையும் சென்ற இடங்களையும் பற்றி கேள்வி எழுப்பினால், அவர்கள் அனைவரும் ஒரே பதிலையே தருவார்கள். இதுவே இந்த பயிற்சியின் சிறப்பு.
அகஸ்தியர், போகர் போன்ற சித்தப் பெருமக்கள் அனைவரும் இதுபோன்ற தியானங்களை மேற்கொண்டே பிரபஞ்சத்தில் உள்ள பூமி, ஒன்பது கோள்கள் மற்றும் ஈரேழு பதினான்கு உலகங்களையும் கண்டு கொண்டார்கள். இந்த தியான முறைக்கு “தியான பொத்தகம்” என்று பெயர். இந்த முறையை கற்றறிந்த குருமார்கள் அனைவரும் இதனை ஒரே மாதிரியே கற்றுக் கொடுப்பார்கள். இந்த பயிற்சி முறைகளே ஸ்ரீ அகம் ஆஸ்ரமத்தில் நடைபெறும் தியான வகுப்புகளில் கற்றுக் கொடுக்கப்படுகிறது.