ஆன்மீகத்தைக் கடைபிடிக்கும் ஒவ்வொருவருக்கும், தங்கள் கவனம் முழுவதும் ஆன்மீகத்தில் இருக்க வேண்டும் என்பதை நினைவூட்ட சில அடையாளப் பொருட்கள் தேவைப்படுகின்றன. பெரும்பாலானோர் பல்வேறு விதமான மாலைகளை அணிகிறார்கள்; அந்த மாலை எப்பொழுதும் இதயத்தின் அருகே இருப்பதால் ஒரு கவசமாக இருந்து பாதுகாக்கும். ஆன்மீகத்தைக் கடைபிடிக்கும் எந்த ஒரு மனிதரும் நிராயுதபாணியாக இருக்கக் கூடாது; ஒரேயொரு மணியாவது அணிய வேண்டும். அந்த மணியும் 27 நட்சத்திரக்காரர்களுக்கும் மாறுபடும். பெரும்பாலோர் தேர்ந்தெடுப்பது ருத்திராட்ச மாலை; ஆனால் முகங்களின் அடிப்படையில் ருத்திராட்சத்தில் பல வகைகள் உள்ளன, சிலருக்கு அது பொருந்தாது. சரியான மாலையை அணிவதன் மூலம் ஆன்மீக இலக்குகளை விரைவில் அடையலாம்.
அதன்பிறகு ஆன்மீக குருமார்களிடம் இருந்து தனக்கென ஒரு பிரத்யேக மந்திரத்தைக் கற்றுக்கொள்ள வேண்டும். பிறகு ஒவ்வொருவரும் அவரவர் பிறப்பு அம்சங்கள் மற்றும் இஷ்ட தேவதைகளின் துணைக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட ஒரு எந்திரத்தை குருமார்களிடம் பெற்று அனுதினமும் வழிபட வேண்டும். அந்த எந்திரங்கள் இங்கே வடிவமைத்துக் கொடுக்கப்படும். மணி (மாலை), மந்திரம், எந்திரம் மற்றும் தந்திரம் — இந்த நான்கையும் யார் சரியாகக் கடைபிடிக்கிறார்களோ, அவர்களுக்கு அவ்சதம் (மருத்துவம்) தேவையில்லை; ஏனெனில் அவர்களின் மனம் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கும் — அதுவே நிரந்தர சஞ்சீவி.
சாதாரண மனிதர்கள் தினமும் எழுந்து குளித்து உணவருந்தி உடலைப் பேணுவது போல, ஆன்மீகத்தைக் கடைப்பிடிப்பவர்கள் மனதைத் தயார்படுத்தத் தேவையான பயிற்சிகளும் ஆன்மீகப் பொருட்களும் ஸ்ரீ அகம் ஆஸ்ரமத்தில் வழங்கப்படுகின்றன. அப்பொருட்களை அவரவருக்கு ஏற்றவாறு வடிவமைத்துக் கொடுக்கிறோம்.