ஓம் ஜெயஸ்ரீ மகா ஆத்மநாத அம்பலவாணாய நமஹ +91 94898 89848
நிகழ்வுகள் › பௌர்ணமி விழா

பௌர்ணமி விழா

📅 1 அக்டோபர் 2026 🕐 Evening onwards 📍 Erode Ashram Moon Meditation by Guruji

The Full Moon Festival is a monthly event that celebrates the full-moon day. It is a time to reflect, meditate, and connect with the divine energy of the moon.

பௌர்ணமி நாளில் வானில் முழுநிலவு மிகவும் பிரகாசமாக காட்சியளிக்கும்; அந்த நேரத்தில் நேர்மறை சக்திகள் உயிர்ப்புடன் இருக்கும். அச்சமயத்தில் இறை வழிபாடு மேற்கொள்ளும் போது நாம் எண்ணற்ற பலன்களை பெறலாம். எனவே பௌர்ணமியை ஒரு திருவிழாவை போல கொண்டாட வேண்டும்.

ஒரு தனி மனிதன் பௌர்ணமியை விழாவாக கொண்டாட, ஒரு இயற்கை சூழலும், நீர்நிலையும், சிறிது வெளிச்சமும் இருக்க வேண்டும். அத்தகைய சூழலில் ஐம்பூதங்களையும் அடிப்படையாக கொண்டு உள்மனதில் தேடலை மேற்கொள்ளும் போது, தன்னைப் பற்றிய பல கேள்விகளுக்கு விடை கிடைக்கும்.

ஸ்ரீ அகம் ஆஸ்ரமத்தில், கடற்கரை அல்லது மலை சார்ந்த இடங்களில் ஒரு யாகம் செய்து யோகம் பெற, அதிகாலை வரையிலும் பௌர்ணமி விழாக்கள் கொண்டாடப்படுகின்றன.

தரிசனம் பதிவு செய்யுங்கள் தொடர்பு

← நிகழ்வுகள்