ஓம் ஜெயஸ்ரீ மகா ஆத்மநாத அம்பலவாணாய நமஹ +91 94898 89848
நிகழ்வுகள் › சண்டி ஹோமம்

சண்டி ஹோமம்

📅 24 செப்டம்பர் 2026 🕐 09:00 – 13:00 📍 Erode Ashram Homam Chandi by Guruji

Chandi Homam is a powerful ritual dedicated to Goddess Chandi, the fierce form of Goddess Durga. It is performed to seek her blessings for protection, prosperity, and victory over evil forces.

சண்டி ஹோமம் என்பது மனித வாழ்வில் ஏற்படும் தடைகளைத் தகர்த்தெறியக் கூடிய வல்லமை கொண்டது. இந்த ஹோமம் உலகில் உள்ள அனைத்து உயிர்களையும் காத்து ரட்சிக்கும் துர்க்கையின் அம்சமான சண்டி தேவியை வணங்கி வழிபடச் செய்யப்படுகிறது. விசேஷமான மந்திரங்களை ஓதி யாகங்களைச் செய்யும் போது, அவள் மனமகிழ்ந்து நம் வாழ்வில் உள்ள தடைகளை நிவர்த்தி செய்து நம்மை செழுமையாக வாழ வைப்பாள்.

முற்காலத்தில் இந்த ஹோமத்தை அனைத்து மன்னர்களும் மன்னர் நிலை கொண்ட மாமனிதர்களும் செய்தார்கள். தற்போது இந்த யாகத்தை தனி மனிதர்களும், பொருளாதார வசதி இல்லாதவர்கள் ஒன்று சேர்ந்தும் செய்கிறார்கள். இதனை குருமார்களும் வேத வித்வான்களும் வழி நடத்துகிறார்கள்.

சண்டி ஹோமத்தை செய்வதன் மூலம் நம் வாழ்வில் தெரிந்தோ தெரியாமலோ நாம் செய்த பாவங்கள் நீங்கி, அதனால் ஏற்படும் தடைகள் விலகும்.

தரிசனம் பதிவு செய்யுங்கள் தொடர்பு

← நிகழ்வுகள்